விழுப்புரத்தில் வைணவ மாநாடு

X
விழுப்புரத்திலுள்ள ஜெயசக்தி மண்டபத்தில், நடந்த வைணவ மாநாட்டை அரசூர் வேங்கடரமண தேசிகதாசன், கருடக்கொடியேற்றி வைத்து துவக்கி வைத்தார். கோதண்டபானி தேசிகதாசன் வரவேற்றார். சென்னை அனந்தபத்மநாபாசார்ய சுவாமிகள், 'சுவாமி வேதாந்த தேசிகர் மற்றும் பாகவத சிஷ்யர்களும்' தலைப்பில் சொற்பொழிவாற்றினர்.மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியர் சுவாமிகள், தலைமை தாங்கினார். திருமாலின் கீர்த்தனைகள் பற்றி ஸ்ரீரங்கம் கிருஷ்ணதாஸ் சுவாமிகளும், மாநாடு கைங்கர்யதாரர்களை அறிமுகம் செய்து வைத்து ஜனார்த்தனம் தேசிகதாசனும், திருமங்கை ஆழ்வாரின் தொண்டு பற்றி வேங்கடேச தேசிகதாசனும் கூறினர்.விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி ஆன்மிக சொற்பொழிவாற்றினார். பின், அவருக்கு, ஆன்மிக சமூகநல நெறியாளர் என்ற பட்டத்தை ஆனந்தபத்மநாபாசார்ய சுவாமிகள் வழங்கினார்.மாநாட்டில், நம்முடைய குழந்தைகளுக்கு இந்து கலாசார பண்பாடு, பழக்கவழக்கங்களை கற்றுத்தருதல், வாரம் ஓரிடத்தில் சத்சங்கம் (கூட்டு வழிபாடு) உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரவிச்சந்திர தேசிகதாசன் நன்றி கூறினார்.
Next Story

