அரசுப் பொதுத் தோ்வின் போது தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை

அரசுப் பொதுத் தோ்வின் போது தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை
X
அரசுப் பொதுத் தோ்வின் போது தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை
தென்காசி கோட்டத்துக்குள்பட்ட பாவூா்சத்திரம் பிரிவு பகுதியில் அரசுப் பொதுத் தோ்வின்போது தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பாவூா்சத்திரம் பகுதியில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வு நடைபெறும் தோ்வு மைய பள்ளிகளான ஔவையாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மற்றும் த.பி. சொக்கலால் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மின் விநியோகம் வழங்கும் மின் மாற்றிகள் முழுமையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு சீரான மின்னழுத்தம் இருப்பதை பாவூா்சத்திரம் உதவி மின் பொறியாளா் தலைமையிலான பணியாளா்களள் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு உறுதி செய்தனா். மேலும், இரண்டு பள்ளித் தலைமையாசிரியா்களிடமும் உதவி மின் பொறியாளா், உதவி செயற்பொறியாளா், கைப்பேசி எண்கள் அடங்கிய கையேடுகளை பாவூா்சத்திரம் உதவி மின் பொறியாளா் முகமதுஉசேன் வழங்கி, பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டு மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் உடனடியாக தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
Next Story