சிவன்மலை சுப்ரமணியசாமி கோவிலில் தெப்ப குளத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவம். 

சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் தேர் திருவிழாவில் தெப்பக்குளத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவ விழா நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை அருள்மிகு சுப்ரமணியசாமி கோயிலில் தைப்பூச தேர்த் திருவிழா கடந்த 2ம் தேதி வீரகாளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதில் 11,12,13 ஆகிய மூன்று நாட்கள் தேரோட்டம் நடைபெற்று பிப்.13 ம்தேதி தேர் நிலை அடைந்தது. இதில் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மலை அடிவாரத்தில் கோவிலுக்கு சொந்தமான நந்தவனத் தோட்டத்தில் தெப்ப குளத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவம் நேற்று   நடைபெற்றது. சுவாமி பரிவேட்டை மண்டபத்திற்கு எழுந்தருளினார், இததையடுத்து குளத்தில் தெப்பம் விடப்பட்டது. இன்று மஹா தரிசனம் காலை 9 மணிக்கு நடைபெற்றது. தொடர்ந்து தைப்பூசத் தேர்த்திரு விழா நிகழ்சிகள் வருகிற 20ம் தேதி  கொடி இறக்குதல் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் விழா நிறைவடைகிறது.
Next Story