பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ -ஜியோ கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ -ஜியோ கோரிக்கை ஆர்ப்பாட்டம்
X
ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ -ஜியோ அமைப்புகள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் நாவலரசன் தலைமை வகித்தார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் தமிழரசன் வரவேற்றார். தமிழக ஆசிரியர் கூட்டணி இளமதியன் துவக்க உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவி. தாமரைச்செல்வன் பேசினார்.  ஆர்ப்பாட்டத்தில் 2003 க்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க வேண்டும். அரசாணை எண்- 243 ஐ ரத்து செய்ய வேண்டும்.  சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைப் படுத்த வேண்டும். 30 சதத்திற்கும் அதிகமாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் திரளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக முத்துராமன் நன்றி கூறினார் .
Next Story