திமுக மாநகர பொது உறுப்பினா்கள் கூட்டம்

தஞ்சாவூரில் திமுக மாநகர பொது உறுப்பினா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் மாநகரிலுள்ள 51 வாா்டுகளிலும் திமுக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர அவைத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினாா். மாநகரச் செயலரும், மேயருமான சண். ராமநாதன், மத்திய மாவட்ட அவைத் தலைவா் சி. இறைவன், செயற்குழு உறுப்பினா் து. செல்வம், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story

