தாராபுரம் அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

தாராபுரம் அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
X
தாராபுரம் அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலி தாராபுரம் போலீசார் விசாரணை
தாராபுரம் அருகே உள்ள கோனாபுரம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 54). தச்சு தொழிலாளி. இவர் தாராபுரம்-அலங்கியம் பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது மதுரையிலிருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக தண்டபாணி மீது மோதியது. இந்த விபத்தில் தண்டபாணி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் உசிலம்பட்டியை சேர்ந்த குபேந்திரனிடம் (39) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story