டி.ஐ.ஜி. தம்பதி விவாகரத்து என சமூக வலைத்தளங்களில் வதந்தி

X
திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக இருப்பவர் வருண்குமார். இவரது மனைவி வந்திதாபாண்டே. திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் மத்திய அரசு பணிக்கு சென்று விட் டார். ஐ.பி.எஸ். தம்பதியரான இவர்கள் சமூக வலைத்தளங்களில் அவ் வப்போது தங்களது படங்களை வெளியிடுவது உண்டு. குடியரசு தினத் தன்று, இவர்கள் இருவரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்ற நிலை யில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து தங்க ளது சீருடையில் அதற்கான அடையாளங்களை மாற்றம் செய்வது போன்ற வீடியோவை ரீல்ஸ் ஆக பதிவிட்டு இருந்தனர். இணையத்தை கலக்கிய அந்த வீடியோ மற்றும் படங்களுக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் டி.ஐ.ஜி. வருண்குமார் இன்ஸ் டாகிராமில் தனது மனைவியுடன் பதிவிட்டு இருந்த ஒரு படத்தை சிலர் 'ஹேக்' செய்து, அவர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இது குறித்து விசாரித்த போது அது வதந்தி என்றும், வருண்குமாருக்கு எதிரானவர்களால் இது பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Next Story

