ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

X
சங்கராபுரம் தாசில்தார் அலுவலகம் அருகில் ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் சம்சுதீன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ராஜா வரவேற்றார். ஜாக்டோ-ஜியோ மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் லட்சுமிபதி, ஆசிரியர் தேவராஜன், ஞானப்பிரகாசம், ஜான்ரத்தினம், செல்லதுரை,சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் விஜயா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
Next Story

