**வாணியம்பாடி ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இன்ஜினில் திடீர் புகை வந்ததால் நிலையத்திலேயே ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக ரயில் நிறுத்தம் பயணிகள் அவதி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இன்ஜினில் திடீர் புகை வந்ததால் நிலையத்திலேயே ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக ரயில் நிறுத்தம் பயணிகள் அவதி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லக்கூடிய மின்சார ரயில் இன்று காலை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் போதே ரயில் பின்பக்க என்ஜினில் இருந்து திடீரென புகை வந்துள்ளது, அப்பொழுது ரயில்வே ஊழியர்கள் கூடுதல் என்ஜினை பொருத்திய அனுப்பிய நிலையில், மின்சார ரயில் காலை 8:10 மணி அளவில் வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த போது, மின்சார ரயில் பின்பக்க என்ஜீனில் இருந்து திடீரென புகை வருதை கண்ட ரயில்நிலைய ஊழியர்கள், இதுகுறித்து, ரயில் ஓட்டுநருக்கு தகவல் அளித்த போது, வாணியம்பாடி ரயில் நிலையத்தில் மின்சார ரயில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டு, ரயில்வே ஊழியர்கள் என்ஜினை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.. மேலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சார ரயில் நிறுத்தப்பட்டதால், பணிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்த நிலையில், அவ்வழியாக சென்ற விவேக் விரைவு ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசிதியிற்காக வாணியம்பாடி ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நிறுத்தப்பட்ட நிலையில், மாணவர்கள், பொதுமக்கள் விவேக் விரைவு ரயிலில் ஏறிச்சென்றனர்.. அதனை தொடர்ந்து மின்சார ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதினை ரயில்வே ஊழியர்கள் சரி செய்ததை அடுத்து சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு 9:10 மணிஅளவில் மின்சார ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச்சென்றது... மேலும் மின்சார ரயில் என்ஜினில் இருந்து திடீரென புகைவந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
Next Story



