மல்லப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்கள் பள்ளிவளாகத்தை துடப்பத்தால் தூய்மை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்*

மல்லப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்கள் பள்ளிவளாகத்தை துடப்பத்தால் தூய்மை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்*
திருப்பத்தூர் மாவட்டம் மல்லப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்கள் பள்ளிவளாகத்தை துடப்பத்தால் தூய்மை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 80 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இந்தநிலையில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் விடுமுறை என்பதால் விடுமுறை முடிந்து இன்று திங்கட்கிழமை காலை பள்ளி மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் துடப்பத்தை கொடுத்து பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும்படி கூறியதாக கூறப்படுகிறது இதனை பார்த்த பொதுமக்கள் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவ செய்துள்ளனர் இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புத்தகத்தை கொடுத்து பள்ளிக்கு குழந்தைகளை கல்வி கற்க அனுப்பி வைத்தால் ஆசிரியர்கள் கையில் துடப்பத்தை கொடுத்து பள்ளி உள்வளாகத்தை தூய்மை செய்ய சொல்லும் இந்த செயல் வருத்தத்தை அளிப்பதாகவும் மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதுபோல மாணவர்களை வளாகத்தை சுத்தம் செய்யச் சொல்லும் ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Next Story