திருப்பத்தூரில் செல்போன் டவர் வேண்டாம் என அதிகாரிகளின் காலில் விழுந்த பொதுமக்களால் பரபரப்பு.*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் செல்போன் டவர் வேண்டாம் என அதிகாரிகளின் காலில் விழுந்த பொதுமக்களால் பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு 7வது தெரு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏர்டெல் செல்போன் டவர் 80 சதவீதம் பணி முடிவடைந்துள்ளது. அப்பகுதி சார்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் எங்கள் பகுதியில் செல்போன் டவர் வேண்டாம் கேன்சர், கர்ப்பப்பை பிரச்சனை, இருதய நோய் உள்ளிட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே செல்போன் டவர் வேண்டாம் என 50க்கும் மேற்பட்டோர் செல்போன் டவரின் கீழ் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு நகர போலிசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் துறை வட்டாட்சியர் தணிக்காச்சலம் என்பவரின் காலில் விழுந்து எங்களுக்கு இப்பகுதியில் செல்போன் டவர் வேண்டாம் என கேட்டு கொண்டனர். பின்னர் உரிய விசாரணை நடத்தி தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story



