தென்காசியில் இன்ஸ்பெக்டர் ஆடி வேலுவை பாராட்டிய எஸ்பி ஆனந்த்

X
தென்காசி பகுதியில் நடைபெற்ற இரண்டு கொலை வழக்குகளிலும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் க. ஆடிவேலை பாராட்டி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நற்சான்றிதழ் வழங்கினார். தென்காசி மாவட்டம் இலத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்தில் கடந்த பிப்.11ஆம் தேதி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த பெண் கமலி கொலை வழக்கில் கொலையாளியான அவரது கணவர் ஜான் கில்பர்ட் மற்றும் அதற்கு உதவிய ஜான் கில்பர்ட் தம்பியை போலீசாரம் கைது செய்தனர். மேலும் அதனைத் தொடர்ந்து கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடந்த 12ஆம் தேதி தனியாருக்கு சொந்தமான தென்னே தோப்பில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சிவராஜ் கொலை வழக்கில் கொலையாளியான அவரது மகன் கௌரிராஜை போலீசார் கைது செய்தனர். மேற்கண்ட இரு வழக்குகளிலும் போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர். இந்த இரண்டு வழக்குகளிலும் சிறப்பாக பணியாற்றிய கடையநல்லூர் காவல் ஆய்வாளர் க. ஆடிவேலுவை நேற்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.
Next Story

