தென்காசியில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு கோலாகலம் நடைபெற்றது

X
தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று இரவு சங்கடகர சதுர்த்தி பூஜை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் விநாயகர் சன்னதியில் இரவு சங்கடகர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. விநாயகருக்கு நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாரனை நடைபெற்றது. தென்காசி தெற்கு மாசி வீதி கற்பக விநாயகர் கோவில், குற்றாலம் குற்றாலம் நாதர் கோவில், இலஞ்சி திருவிலஞ்சி குமரன் கோவில், செங்கோட்டை சிவன் கோவில், பண்பொழி திருமலைக் குமார சுவாமி கோவில், ஆய்க்குடி பாலசுப்பிர மணிய சுவாமி கோவில் மற்றும் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை அருளிமிகு ஸ்ரீபசி துஷ்டராயகண்ட விநாயகர் கோவிலில் விநாயகருக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், விபூபதி, சந்தணம் நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.
Next Story

