தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விண்ணப்ப அங்கீகார படிவம் ஒப்படைக்கும் நிகழ்வு

மாவட்ட நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஒன்றிய நிர்வாகிகள்
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி ஊராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விண்ணப்ப அங்கீகார படிவம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட கழக செயலாளர் பாலு, மாவட்ட கழக இணைச் செயலாளர் சதாசிவம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. குளித்தலை ஒன்றிய செயலாளர் நிரேஷ் குமார் முன்னிலையில் குளித்தலை ஒன்றிய துணைச் செயலாளர் லாகுல் பிரசாந்த் ஏற்பாட்டில் பொய்யாமணி பிரசன்னா மேற்பார்வையில் மாவட்ட நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொய்யாமணி ஊராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளில் 135 கிளை நிர்வாகிகளுக்கான விண்ணப்ப அங்கீகார படிவம் மற்றும் பொய்யாமணி ஊராட்சிக்கு உட்பட்ட 6 பூத் நிர்வாகிகளுக்கான படிவம் மாவட்ட தலைமையிடம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கரூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் பொன்.வினோத், குளித்தலை ஒன்றிய இணைச் செயலாளர் தியாகு, தோகைமலை ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார், குளித்தலை நகர செயலாளர் விஜய், குளித்தலை நகர இணைச் செயலாளர் பிரபு, குளித்தலை நகர பொருளாளர் சிவா மற்றும் கழகத் தோழர்கள், பொய்யாமணி ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story