மத்திய இணை அமைச்சர் தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து வருவது தமக்கு திருப்தி அளிப்பதாக பேட்டி...

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆய்வு மேற்கொண்ட மத்திய இணை அமைச்சர் தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து வருவது தமக்கு திருப்தி அளிப்பதாக பேட்டி..... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒன்றிய அரசின் மாநிலங்கள் விவகாரத்துறை மற்றும் தரைவழி போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஸ்ரீ ஹரிஷ் மல்கோத்ரா இன்று ஆய்வு மேற்கொண்டார். ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பின் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு வகையான திட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அங்கன்வாடி துறை, மருத்துவ துறை, நீர் பகிர்மான துறைகளில் தமிழக அரசின் நிதியோடு ஒன்றிய அரசின் நிதியும் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களில் மத்திய அரசின் நிதி பங்களிப்போடு செயல்பட்டு வரும் திட்டங்களை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்திரவிட்டார். அதன் அடிப்படையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மல்லி, தைலாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய இணையமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக மல்லி இராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்போடு வழங்கப்பட்டு வரும் விவசாய உபகரணங்களை வழங்கியவர், ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் வழியில் உள்ள தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வேலைப் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த மத்திய அமைச்சர் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார் மருத்துவமனையின் ஆய்வகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்திய அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில் பிரதமர் மத்திய அமைச்சர்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அங்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசின் இணைப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் இது குறித்து தனக்கு அறிக்கை வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் தான் தற்போது விருதுநகர் மாவட்டத்திற்கு வந்திருப்பதாகவும் மாவட்டத்தில் தான் மேற்கொண்ட ஆய்வு தமக்கு திருப்தி அளிப்பதாகவும் குறிப்பாக அங்கன்வாடி மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் மத்திய அரசின் ஜன் தன் யோசனா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் நேரடியாக வந்து சேர்ந்திருப்பதாகவும் ஒவ்வொரு வீடுகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறினார். தமிழக அரசின் செயல்பாடு மற்றும் தமிழக அதிகாரிகளின் செயல்பாடு தமக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக தெரிவித்தார்.
Next Story

