குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமையை ரத்த செய்ய வேண்டும எனக் கூறி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ....*

X
விருதுநகர் மாவட்டம் தோணுகால் கிராம மக்கள் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமையை ரத்த செய்ய வேண்டும எனக் கூறி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு .... விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாக்குட்பட்ட தோணுக்கால் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்வசித்து வருவதாகவும், இந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் இந்த பகுதியில் மதுரையைச் சார்ந்த திருமாவளவன் என்பவருக்கு குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி தந்திருப்பதாகவும், மேலும் அந்த இடத்தில் திருமாளவன் பூமி பூஜை நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இடத்தில் குவாரி அமைக்கப்பட்டால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் எனவும் இதனால் குவாரி அமைய உள்ள இடத்தை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாக தலையிட்டு அந்த இடத்தை ஆய்வு செய்து குவாரி அமைக்க தடைவிதிக்க வேண்டும் என்று கூறி, ஊர்மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
Next Story

