கிராம நிர்வாக அலுவலர் அஜீதா அவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம்*

கிராம நிர்வாக அலுவலர் அஜீதா அவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து  கிராம நிர்வாக அலுவலர்கள்  சங்கத்தினர்  ஆர்பாட்டம்*
X
கிராம நிர்வாக அலுவலர் அஜீதா அவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம்*
விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் கிராம நிர்வாக அலுவலர் அஜீதா அவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இ.குமாரலிங்காபுரம் பெரிய கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கடந்த ஜனவரி ம 28ம் தேதி ஜேசிபி வாகனம் மற்றும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து கனிம வள திருட்டை தடுக்க தவறியதாக இ. குமாரலிங்கபுரம் கிராமநிர்வாக அலுவலர் அஜீதா மற்றும் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவிட்டார். இதில் இ.குமாரலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் அஜீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவரின் பணியிடை நீக்கத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திரும்ப பெற வலியுறுத்தி, இன்று வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராமநிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக வட்ட தலைவர் முனியசாமி தலைமையில் 30க்கும் மேற்பட்ட கிராமநிர்வாக அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் இந்த நிகழ்வின் போது செலாளர் கார்த்திகேயன், முன்னாள் வட்ட பொருளாளர் செல்வி, துணை தலைவர் கதிரேசன், துணை செயலாளர் சுப்புலட்சுமி, துணை பொருளாளர் மாவட் தலைவர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்வினை மாவட்ட தலைவர் முருகேசன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் .
Next Story