எட்டுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில்
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், நேற்று இலக்கிய மன்ற விழா, விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.பி.சிங்காரவேல் தலைமை வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் லேகா காரல் மார்க்ஸ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கி.அருள்குமரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சு.ராஜ்குமார் சொல்லின் சுவை என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் பேசினார். மேலும், பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



