தமிழ்க்கூடல் விழா

X
தமிழ்க்கூடல் விழா பெரம்பலூர் மாவட்டம் பொம்மனப்பாடி அரசு ஆதிந உயர் நிலைப் பள்ளியில் இன்று 17.02.2025 திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் தமிழ் கூடல் நிகழ்வு நடைபெற்றது.பள்ளியின் தலைமை ஆசிரியை ம.பிச்சாயி தலைமை ஏற்கவும், துவக்க பள்ளியின் தலைமை ஆசிரியை ந.சின்னம்மாள், உயர் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வ.தமிழரசி, பெ.நீலவானில் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மரியாதைக்குரிய இலாடபுரம் அரசு ஆதிந உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் த. மாய கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தமிழ் மொழியின் சிறப்புகளையும், பெருமைகளையும், இலக்கண இலக்கிய வளம்மிக்க சிறப்புமிக்க மொழி, உலகின் தோன்றிய முதல் மொழி, செம்மொழி சிறப்பு மிக்க நம் தாய்மொழி தமிழ் மொழி என்று விளக்கினார். தஞ்சை பெரிய கோயிலின் கோபுரம் 216 அடி உயரம் ,தமிழில் உயிர் மெய் எழுத்துகள் 216 என மொழியின் தொடர்பில் கலைத் திறன்களை ஒப்பிட்டு பேசினார். மாதா பிதா குரு தெய்வம் பெற்றோரை வணங்க வேண்டும், பெரியோரை மதிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன், குறிக்கோளுடன் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம், புத்தகங்களை வாசிக்க வேண்டும். காந்தி காமராஜர், நேரு, அம்பேத்கார், அப்துல் கலாம் போன்ற தலைவர்களின் வரலாறுகளை படிக்க வேண்டும். அவர்களின் கருத்துரைகளை மனதில் கொண்டு வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். கல்வி வாழ்வின் அடிப்படை கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றார். மாணவ மாணவிகள் & ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டதாரி ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் பள்ளியின் தமிழ் ஆசிரியை ந.கலையரசி நன்றி கூற இனிதே நிகழ்வுகள் நிறைவு பெற்றது.
Next Story

