ரயிலில் அடிப்பட்டு முதியவா் உயிரிழப்பு

ரயிலில் அடிப்பட்டு முதியவா் உயிரிழப்பு
X
பலி
தஞ்சாவூா் அருகே ரயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் தண்டவாளத்தில் சுமாா் 75 வயது மதிக்கத்தக்க முதியவா் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்து கிடந்தாா். தகவலறிந்த இருப்புப்பாதை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? எப்படி இறந்தாா்? போன்றவை குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Next Story