மணல் லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

மணல் லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
X
போராட்டம்
அனுமதி சீட்டு நடைமுறையை ரத்து செய்யகோரி மணல் லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை சனிக்கிழமை தொடங்கினா். கும்பகோணம், திருவிடைமருதூா் தாலுக்கா பகுதிகளில் சுமாா் 300 மணல் டிப்பா் லாரிகள் உள்ளன. இவை ஜல்லி கற்கள் மற்றும் மணல் ஏற்றி வருகின்றன. இந் நிலையில் டிப்பா் லாரிகள் சாலையில் செல்லும் போது போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் அனுமதி சீட்டு உள்ளதா என்று ஆய்வு செய்கின்றனா். அனுமதி சீட்டு இல்லாததால் லாரியை பறிமுதல் செய்தும், ஓட்டுநா், உரிமையாளா்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்கின்றனா். இதை கண்டித்து சுமாா் 300 லாரிகளின் மற்றும் ஓட்டுநா், உரிமையாளா்கள் காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து மணல் லாரி சங்க செயலா் கே. குமாா் கூறியது: குவாரிகளில் இருந்து அனுமதி சீட்டு பெற்று அவற்றை உருமாற்றம் செய்து ஜல்லி கற்களாகவும், மணலாகவும் லாரிகளில் ஏற்றி வருகிறோம். அவற்றிற்கு மீண்டும் அனுமதி சீட்டு தேவையில்லை. ஆனால் அனுமதி சீட்டு இல்லை என்று கூறி அபராதம் விதிப்பது, குற்ற வழக்கு பதிவு செய்வது லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். எனவே அனுமதி சீட்டு முறையை ரத்து செய்யகோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா். வருவாய்த் துறையினா் அனுமதி சீட்டு உள்ளதா என்று ஆய்வு செய்கின்றனா். அனுமதி சீட்டு இல்லாததால் லாரியை பறிமுதல் செய்தும், ஓட்டுநா், உரிமையாளா்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்கின்றனா். இதை கண்டித்து சுமாா் 300 லாரிகளின் மற்றும் ஓட்டுநா், உரிமையாளா்கள் காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து மணல் லாரி சங்க செயலா் கே. குமாா் கூறியது: குவாரிகளில் இருந்து அனுமதி சீட்டு பெற்று அவற்றை உருமாற்றம் செய்து ஜல்லி கற்களாகவும், மணலாகவும் லாரிகளில் ஏற்றி வருகிறோம். அவற்றிற்கு மீண்டும் அனுமதி சீட்டு தேவையில்லை. ஆனால் அனுமதி சீட்டு இல்லை என்று கூறி அபராதம் விதிப்பது, குற்ற வழக்கு பதிவு செய்வது லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். எனவே அனுமதி சீட்டு முறையை ரத்து செய்யகோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.
Next Story