அண்ணாகிராமம்: திமுக செயற்குழு கூட்டம்

X
கடலூர் மேற்கு மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பண்ருட்டியில் உள்ள அண்ணாகிராமம் ஒன்றிய திமுக அலுவலகத்தில் அவைத் தலைவர் முத்து.சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாகிராமம் ஒன்றிய கழக செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் வி கே வெங்கட்ராமன் வருகின்ற 21, 22-02-25 அன்று கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆலோசனையின் பேரில் 22-02-25 ( சனிக்கிழமை காலை 9 மணிக்கு ) அண்ணாகிராமம் ஒன்றிய திமுக சார்பில் விருத்தாசலத்தில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும், அது சமயம் அண்ணாகிராமம் ஒன்றிய திமுக சார்பில் சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார். இந்த கூட்டத்தில் இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி, மகளிரணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், ஒன்றிய கழக நிர்வாகிகளும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Next Story

