ஆட்டோ மீது பேருந்து மோதியதில் இருவா் காயம்

ஆட்டோ மீது பேருந்து மோதியதில் இருவா் காயம்
X
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இரவு ஆட்டோ மீது பேருந்து மோதியதில் ஓட்டுநா் உள்பட இருவா் காயமடைந்தனா்.
ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு அரசுப் பேருந்து சென்றது. அப்போது இளையான்குடி அருகே திருவள்ளூா் விலக்கு பகுதியில் சென்ற போது, குறுக்கே வந்த ஆட்டோ மீது பேருந்து மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநா் அசோக்குமாா், அதில் பயணம் செய்த பாப்பாத்தி இருவரும் காயமடைந்தனா். இவா்களில் அசோக்குமாா் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு செல்லப்பட்டாா். பாப்பாத்தி இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
Next Story