காங்கேயத்தில் கழிவுகள் கலந்த குடிநீர் வினியோகம்

காங்கேயத்தில் கழிவுகள் கலந்த குடிநீர் வினியோகம்
X
காங்கேயத்தில்  சாக்கடை மற்றும்  கழிப்பறை கழிவுகள் கலந்த குடிநீர் விநியோகம் - சுகாதார சீர்கேடு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை 
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ளது குறிஞ்சி நகர். இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதற்கு நகராட்சி சார்பில் வழங்கப்படும் காவேரி குடிநீரில் சாக்கடை மற்றும் கழிப்பறை கழிவுகள் கலந்த குடிநீர் விநியோகிக்க பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என குற்றசாட்டு.   காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 11 வார்டுக்கு உட்பட்ட பழையகோட்டை சாலையில் உள்ள குறிஞ்சி நகரில் சுமார் 100க்கும்  மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த வீடுகளுக்கு நகராட்சி நிர்வாகத்தால் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது இந்த நிலையில் நேற்று இதே பகுதியில் வசிக்கும் திருமலைசாமி (65) என்பவர் குளிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளார் நீண்ட நேரம்  ஆகியும் கழிவறையை விட்டு வரவில்லை மேலும் கழிவறை கதவருகே சென்று கூப்பிட்டாலும் பேச்சில்லை என்று சந்தேகித்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால் மயக்கநிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளனர். மேலும் உடல் முழுவதும் துர்நாற்றம் வீசியதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீடுவந்து பரிசோதித்ததில் குடிக்க,குளிக்க பயன்படுத்திய தண்ணீர் நிறம் மாறி துர்நாற்றம் விஷயத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் நேற்று முதல் சாக்கடை மற்றும்  கழிப்பறை கழிவுகள் கலந்த குடிநீர் குறிஞ்சி நகர் முழுவதும் விநியோகம்  செய்யப்பட்டுள்ளதாகவும் அறிந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அதை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மேலும் நிலத்தொட்டி,மேல்நிலை தொட்டிகளில் உள்ள குடிநீரை வெளியேற்றும் பணியில்  பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். குறிஞ்சி நகர் முழுவதும் இந்த தண்ணீரை வெளியேற்றுவதால் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் சில பொதுமக்களுக்கு தோல் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாகவும் இப்பகுதியில் குழந்தைகள் அதிகம் உள்ளதாக பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.    பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் பணிகள் நடைபெற்று வருவதால் எந்த இடத்தில் குடிநீர் குழாயில் கழிவறை மற்றும் சாக்கடை நீர் கலக்கிறது தெரியாமல் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.   பொதுமக்களின் சுகாதாரத்தில் பேணிக்காக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே இவ்வளவு அலட்சியமாக செயல்படுவது வேதனை அளிக்கிறது என்கின்றனர் பொதுமக்கள். நகராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்கின்றனர்.
Next Story