மருதூரில் ஆருத்ரா கலைக்கூடம் சார்பில்

மருதூரில் ஆருத்ரா கலைக்கூடம் சார்பில்
X
சலங்கை அணி விழா
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா மருதூரில், ஆருத்ரா கலைக்கூடம் சார்பில் சலங்கை அணி விழா நடைபெற்றது. விழாவிற்கு, வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு தலைமை வகித்தார். ஆருத்ரா கலைக்கூடம் நாட்டிய நடன ஆசிரியர் செளமியா சுகன்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில், தொழிலதிபர் ஆறுமுகம், சமூக ஆர்வலர் டி.எஸ்.பாலு, முன்னாள் வர்த்தக சங்க மாவட்ட செயலாளர் அம்பாள் குணசேகரன், வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், மல்லிகா தென்னரசு, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில், லக்க்ஷனா, சாதனா, மகாஷினி, ஜெனிஷா, பிரணிதா, காயத்ரி ஆகிய 6 மாணவிகளுக்கு, சலங்கை அணிவிக்கப்பட்டு சலங்கை அணி விழா நடைபெற்றது. பின்னர், மாணவிகளின் பாரத நாட்டியம் நடைபெற்றது. முடிவில், சுகன்ராஜ் நன்றி கூறினார்.
Next Story