வேளாண், தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வேளாண், தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா
X
எஸ் ஆர் எஸ் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வேடசந்தூர் அருகே உள்ள எஸ் ஆர் எஸ் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளங்கலை வேளாண்மை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கம் மற்றும் கேடயங்களையும் வழங்கினார். தலைமை விருந்தினராக கல்லூரியின் செயலாளர் முனைவர் ஆதித்யா தலைமை உரை ஆற்றினார். இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் வேலாயுதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் 157 மாணவ மாணவியர்கள் இளங்கலை வேளாண்மை பட்டங்களை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். இதில் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story