திருப்பெயர்: விருத்தாசலம் எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு

திருப்பெயர்: விருத்தாசலம் எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு
X
திருப்பெயர் அருகே விருத்தாசலம் எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் (22-02-2025) வேப்பூர்- திருப்பெயர் ஜெயப்பிரியா பள்ளியில் நடைபெறும் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். அதனையொட்டி நேற்று (17.02.2025) மாநாடு நடைபெறும் இடத்தினை நேரில் சென்று கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நல்லூர் வட்டார தலைவர் முருகானந்தம், கம்மாபுரம் வட்டார தலைவர் சாந்தகுமார், நல்லூர் ஒன்றிய திமுக துணைச் செயலாளர் அன்புகுமரன் இருந்தனர்.
Next Story