தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டை சுவரில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றக் கோரிக்கை

தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டை சுவரில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றக் கோரிக்கை
X
கோரிக்கை
சிவகங்கை பூங்கா அருகே கோட்டை சுவரில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். தஞ்சை கோட்டை நாயக்க மன்னர்களால் 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் எழுப்பப்பட் டது. இந்த கோட்டை பெரிய கோட்டை, சிறிய கோட்டை என இரு பகுதிகளைக் கொண்டவை. சிறியக் கோட்டை பெரியக்கோட்டையைவிட, முந்தைய காலத்தையது. சிறிய கோட்டை பெரியகோட்டையின் தென்மேற்கே அமைந்துள்ளது. இச்சிறிய கோட்டையில்தான் உலகப் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. வடக்கில் கிறிஸ்தவ தேவாலயம், சிவகங்கை பூங்கா. குளம் ஆகியன உள்ளன. 1871-72ல் சிவகங்கை பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு, பலவகை விலங்குகள், பறவைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பெரிய கோவிலை சுற்றிலும் அகழி காணப்படுகிறது. இந்த அகழியை சுற்றிலும் கோட்டை சுவர் உள்ளது. இந்தக் கோட்டை சுவரில் செடி கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கோட்டை சுவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் முளைத்திருந்த செடி, கொடிகள் பொதுமக்களின் புகாரையடுத்து, ஏற்கெனவே அகற்றப்பட்டன. ஆனால், மீண்டும் கோட்டை சுவரில் ஆங்காங்கே செடி, கொடிகள் வளர்ந்து வருகின்றன. அதே போல, சிவகங்கை பூங்கா அருகே பெரியகோட்டை சுவர் அமைந்துள்ளது. இந்த கோட்டை சுவர் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம். இதில், விளம்பரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டுள்ளது. ஆனால், கோட்டைசுவரில் ஆங்காங்கே சிறு, சிறுசெடிகள் முளைத்து வருகின்றன. சுவரின் உச்சி பகுதியில் பெரிய அளவிலான செடிகள், மரங்கள் வளர்ந்துள்ளன. இவ்வாறு, கோட்டை சுவரில் காணப்படும் செடி, கொடிகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வந்தாலும் மீண்டும். மீண்டும் முளைத்துகொண்டே உள்ளன. கோட்டைச்சுவரில் புதர்கள், செடிகள் மற்றும் கொடிகள் முளைத்து காணப்படுவதால் கோட்டை சுவரின் உறுதித் தன்மை குறைந்து பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோட்டை சுவர் பகுதியில் மீண்டும் மீண்டும் வளரும் செடி, கொடிகளை ரசாயனங்களைக் கொண்டு நிரந்தரமாக அகற்ற வேண்டும். சில நூற்றாண்டுகளைக் கடந்து உயர்ந்து நிற்கும் கோட்டை சுவர்களில் முளைந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story