ராமநாதபுரம் விவசாயிகள் மகிழ்ச்சி

X
ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமியான கமுதி பகுதியில் நிரந்தர ஆற்று நீர் பாசனம் இல்லாத நிலையில், மழை நீரை நம்பி மட்டும் உள்ள கமுதி அருகே துத்திநத்தம், திம்மநாதபுரம், டி.வி.எஸ்.புரம், ராணி சேதுபுரம், உச்சிநத்தம், சேதுராஜபுரம், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் 1200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நடப்பாண்டு மானாவாரி பயிராக சூரியகாந்தியை பயிரிட்டு நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு 2024 நவம்பர் மாதம் பெய்த பருவம் தவறிய தொடர் கனமழையால் கஞ்சம்பட்டி ஓடையில் உடைப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து இந்த கிராமங்களில் 2000- த்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட பருத்தி, உளுந்து, மிளகாய் வெங்காயம், சோளம், குதிரைவாலி, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயம் முற்றிலும் நாசமானது இந்நிலையில் விவசாயிகள் வெள்ளநீர் வடிந்த பின் மனம் தளராமல் முழுநம்பிக்கையுடன் தங்களது வயல்களில் இரண்டாவது முறையாக சூரியகாந்தி பயிரிட்டனர். தற்போது விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்து ஆறுதல் அளிக்கும் வகையில் நடவு செய்த சூரியகாந்தி பயிர்கள் காலையில் அதிக பனியாலும், மதியம் கடும் வெயிலாலும், காலை மாலை வேளையில் மிதமான காற்றாலும் அனைத்தும் நன்கு முளைத்து அதிக மகசூல் பெற்று அறுவடைக்கு தயாராக சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு மற்றும் விலை உயர்ந்த பறவைகளுக்கு தீவனமாக கொடுக்கக்கூடிய இந்த சூரியகாந்தி விதைகள் நல்ல விளைச்சலால் இப்பகுதி மக்களுக்கு பெரும் பணத்தை கொடுக்க உள்ளது. மஞ்சள் வண்ணத்தில் அழகான பூக்களை கொண்ட சூரியகாந்தி பூ மற்றவர்களின் மனதை கொள்ளை கொள்ளும் என்பதை விட வறட்சியான இப்பகுதி விவசாய மக்களின் மனதை மட்டும் அல்ல வயிற்றையும் வாழ வைக்கின்றது.
Next Story

