நாகர்கோவில் புகைப்பட கண்காட்சி ; அமைச்சர் பார்வை

X
குமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமை வகித்தார். நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலைநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், - பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி கலையரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு துறைகளின் சார்பில் துவங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களையும் அறிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் தராஜேஷ்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story

