ஹன்ஸ் விற்பனை செய்தவர் கைது

X
ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என தொடர்ந்து போலீசார் எச்சரித்தும், கண்காணித்தும் வருகின்றனர். அந்த வகையில், பவானி ரோடு காமராஜர் பஸ் ஸ்டாப்பில் உள்ள மளிகை கடை ஒன்றில் கருங்கல்பாளையம் போலீசார், நேற்று முன்தினம் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஹன்ஸ், விமல் பாக்கு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அதனை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் சரவணன் (48) என்பவரை கைது செய்தனர். இதேபோன்று, கோபி தாலுகாவிற்கு உட்பட்ட வேலன்கோவில் புடவைக்காரியம்மன் பகுதியில் உள்ள கடை ஒன்றில், சிறுவலூர் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்த ஹன்ஸை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் வடிவேலை (40) கைது செய்தனர்.
Next Story

