இரண்டு பேர் தற்கொலை

இரண்டு பேர் தற்கொலை
X
மதுபோதையில் இருவர் தற்கொலை
பெருந்துறை அடுத்த சீலம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணன் (32). இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு வலிப்பு ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சிகிச்சை எடுத்து வந்த அவர், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி வீட்டிற்கு மதுபோதையில் வந்த கிருஷ்ணன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதபோன்று, நிச்சாம்பாளையம் பொட்டுச்சாமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன் (50). இவர் மதுபழக்கத்திற்கு அடிமையானவர். கடந்த 15ம் தேதி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த அவர், தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் களைகொல்லி மருந்தை அருந்தி செங்கோட்டையன் தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு நசியனூரில உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செங்கோட்டையன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திங்களூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story