காட்டுத் தீ பரவியதால் போக்குவரத்து பாதிப்பு

காட்டுத் தீ பரவியதால் போக்குவரத்து பாதிப்பு
X
கொடைக்கானலில் இருந்து பழனி செல்லும் பிரதான சாலையில் காட்டுத் தீ மல மலவென்று பரவியதால் போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் பழனி மற்றும் வத்தலகுண்டு பகுதியிலிருந்து மலைச்சாலையில் அதிகம் வருவது வழக்கம் இந்நிலையில் பழனி அடிவாரப் பகுதியில் இருந்து கொடைக்கானல் மற்றும் கொடைக்கானலில் இருந்து பழனி செல்லும் பாதையில் காட்டுத்தீ பரவியது இதனால் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது. மேலும் கொடைக்கானலில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று காட்டுத் தீயிணை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். மேலும் இவர்களுடன் வனத்துறை அதிகாரிகளும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர் . மேலும் இதனால் கொடைக்கானல் முதல் பழனி வரை உள்ள மலை சாலையில் சிறிது அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானலில் சில மாதங்களாகவே பனிப்பொழிவு அதிகமாகவும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் மழை இல்லாததாலும் இதுபோன்று காட்டுதீகள் அதிகமாக பரவுவதற்கு நேரிடும். இதனால் வனத்துறையினர் காட்டுத்தீ ஏற்பாடாத வகையில் அகழிகள் ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story