வாலிபர் கைது

வாலிபர் கைது
X
ஈரோட்டில் கோயில் உண்டியலை உடைத்து ரூ.17 ஆயிரம் ரொக்கம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியசேமூர் கல்லாங்கரடு ராம்நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (40). இவர் அப்பகுதியில் உள்ள நாகம்மா கோயில் தர்மகர்த்தாவாக உள்ளார். கடந்த 14ம் தேதி பக்தர்கள் நாகம்மா கோயிலுக்கு சென்றபோது கோயிலின் முன்புறம் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு, விஜயகுமாருக்கு. இதுகுறித்து விஜயகுமார் ஈரோடு வடக்கு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் கோயில் உண்டியலை உடைத்து, ரூ.17 ஆயிரம் ரொக்கம் திருடியது பெரியசேமூர் பகுதியை சேர்ந்த உத்தமன் மகன் அருள்ராஜ் (33) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அருள்ராஜை நேற்று போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story