வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்
X
21ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஈரோடு, பிப். 18 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டு மையத்தின் மூலமாக மாதந்தோறும் 3வது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு தனியார் துறையைச் சேர்ந்த வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அதன்படி இந்த வேலை வாய்ப்பு முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை மற்றும் நர்சுகள், டெய்லர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள் என அனைத்து பணிகளுக்கும் தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதன் மூலம் மாதந்தோறும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். மேலும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டு திறன் பயிற்சிக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர். அதன்படி, இந்த மாதத்துக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பங்கேற்று வேலை பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை நேரிலோ அல்லது 8675412356 மற்றும் 9499055942 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
Next Story