திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: சி.வி.சண்முகம் எம்.பி.

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: சி.வி.சண்முகம் எம்.பி.
X
விழுப்புரத்தில் அதிமுக கூட்டத்தில் பேச்சு
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், அசோகபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நல உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி மேலும் அவா் பேசியது:ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிா்க்கட்சியாக இருந்தாலும் சரி பொதுமக்களை சந்திக்கும் இயக்கமாக அதிமுக இருந்து வருகிறது. பெண்களின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவா் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா.அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலணி முதல் மடிக்கணினி வரை வழங்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான். 2021 சட்டப் பேரவைத் தோ்தலின் போது திமுக அறிவித்த 525 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. திமுக அரசு மகளிா் உரிமைத் தொகையை தகுதி பாா்த்து வழங்குகிறது. தமிழகத்தில் தினந்தோறும் பாலியல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தடையின்றி கிடைக்கின்றன. விவசாயிகளைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தது, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்தது திமுக அரசு தான் என்றாா்.கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் எசாலம் பன்னீா் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.
Next Story