கண்டமங்கலம் அருகே கல்லால் தாக்கப்பட்டவர் சாவு கொலை வழக்காக மாற்றம்

கண்டமங்கலம் அருகே கல்லால் தாக்கப்பட்டவர் சாவு கொலை வழக்காக மாற்றம்
X
கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த கலித்திரம்பட்டு காலனியை சேர்ந்தவர் பச்சையப்பன், 45; பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த 1ம் தேதி இரவு 11:00 மணியளவில், கலித்திரம்பட்டு - வி.நெற்குணம் சாலையில், தலையில் பலத்த காயத்துடன் கிடந்தார் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து, கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், கலித்திரம்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் பாரதிதாசன், 22; என்பவர், தகராறில், பச்சையப்பன் தலையில் கல்லால் தாக்கியது தெரிய வந்தது.பாரதிதாசனை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சையப்பன் நேற்று இறந்தார். அதையடுத்து, கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story