டாஸ்மாக் கடை ஊழியருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

டாஸ்மாக் கடை ஊழியருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
X
விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடை ஊழியருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
விழுப்புரம் வட்டம், கப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் கணபதி மகன் ஆறுமுகம் (47). திருப்பச்சாவடி மேடு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பாா்த்து வருகிறாா்.இவா், பணியிலிருந்தபோது, கடைக்கு வந்த விழுப்புரம் மரகதபுரம் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் பழனிவேல் (43) மதுப் புட்டிகளை கேட்டு தகராறு செய்தாராம். அப்போது, டாஸ்மாக் கடையின் கதவுகளை மூடி ஆறுமுகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்து அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்தாராம்.இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து பழனிவேலுவை கைது செய்தனா்.
Next Story