ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற உம்பளச்சேரி காளை

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற உம்பளச்சேரி காளை
X
திமுக நிர்வாகிக்கு பொதுமக்கள் பாராட்டு
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பொதுக் குழு உறுப்பினர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். இவரின் ஜல்லிக்கட்டு காளை, கொம்பன், சிவலை ஆகிய இரு காளைகள், மதுரை கிழக்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது. இந்த காளை, நாகை மாவட்டம் உம்பளச்சேரி இனவகை காளை ஆகும். இந்த காளையை போட்டியில், யாராலும் பிடிக்க முடியாத காரணத்தால் வெற்றி பெற்று பரிசை பெற்றது. வெற்றி பெற்ற இரு காளைகளுக்கும், வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி பரிசுகளை வழங்கினார். பாரம்பரிய இனமான உம்பளச்சேரி காளை இனத்தை வளர்த்து, அதனை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்த திமுக பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பனை, திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் பாராட்டினர்.
Next Story