கொடைக்கானலில் காட்டெருமைகளால் மக்களுக்கு அச்சம்

கொடைக்கானலில் காட்டெருமைகளால் மக்களுக்கு அச்சம்
X
கொடைக்கானல் | காட்டெருமைகளால் மக்களுக்கு அச்சம்.. வனத்துறையினர் நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரை ஒட்டி குறிஞ்சி நகர் என்ற பகுதி உள்ளது. முன்னதாக இப்பகுதி ஊராட்சி ஒன்றியத்தோடு இணைந்த பகுதியாக இருந்தது. தற்போது இது கொடைக்கானல் நகரத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளதால், வனப் பகுதிகளுக்குள் இருந்து வெளியேறும் காட்டெருமைகள், குறிஞ்சி நகர் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்துவதும் பொது மக்களை அச்சுறுத்தி வருவது , தொடர் கதையாகி வருகிறது. இதனால், காட்டெருமைகளை அருகில் உள்ள புலிச்சோலை வனப்பகுதியில் இருந்து வெளிவராமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து உதவி வன பாதுகாவலர் சக்திவேலிடம் பேசிய பொழுது, குறிஞ்சி நகர் பகுதியில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, மக்களை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறினார்.
Next Story