கட்டிடத் துறையின் பொருட்கள் மற்றும் கட்டுமான தொழில்நுட்பங்களின் புதுமை கருத்தரங்கம்

கட்டிடத் துறையின் பொருட்கள் மற்றும் கட்டுமான தொழில்நுட்பங்களின் புதுமை கருத்தரங்கம்
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் கட்டிடவியல் துறையின் சார்பாக “கட்டிடத் துறையின் பொருட்கள் மற்றும் கட்டுமான தொழில்நுட்பங்களின் புதுமை” என்ற தலைப்பில் கல்லூரியின் நிறுவனர் ர. சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் கல்லூரி முதல்வர் முனைவர் எம். வெங்கடேசன் அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் முனைவர் பி.எஸ்.அம்பிலி, மூத்த முதன்மை விஞ்ஞானி, CSIR, கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், சென்னை கலந்து கொண்டு சிறப்பித்தார். கல்லூரியின் துணை முதல்வர் வி.ரேவதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கத்திற்கு, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நிதி உதவி செய்தது.
Next Story