தென்காசியில் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் - ஆட்சியர் அதிரடி

X
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலத்தூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஊராட்சி செயலர் பண்டாரம் என்பவரை பணியிடை நீக்கம் செய்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் இன்று உத்தரவிட்டார். இது தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலத்தூர் ஊராட்சியில் உள்ள குடிநீர் தொட்டிகள் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
Next Story

