காளியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் விழா

X
Komarapalayam King 24x7 |18 Feb 2025 7:17 PM IST குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி நேற்று பூச்சாட்டுதல் விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர்த்திருவிழாவையொட்டி பூச்சாட்டுதல் விழா நடந்தது. இதனையொட்டி காவிரி ஆற்றில் தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பிப். 25ல் மறு பூச்சாட்டு, பிப். 26ல் கொடியேற்றம், மார்ச் 4ல் தேர்கலசம் வைத்தல், அதே நாள் இரவு காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல், மார்ச் 5ல் மகா குண்டம், பூ மிதித்தல், மார்ச் 6ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, மார்ச் 7ல் தேர் நிலை நிறுத்துதல், வாண வேடிக்கை, அம்மன் திருவீதி உலா, மார்ச் 8ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, மார்ச் 9ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகியன நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி மற்றும் குழுவினர் செய்து வருகிறார்கள். இதில் பூசாரிகள் சண்முகம், சதாசிவம், சண்முகசுந்தரம் உள்பட பலர் சிறப்பு யாக வழிபாடுகள் நடத்தினர். நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
Next Story
