விஏஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

X
ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாத்தூர் பகுதியில் பணியாற்றி வந்த விஏஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா இ.குமாரலிங்காபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த அஜிதா என்பவர் கனிம வளக் கொள்ளையினை தடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையின் மூலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விஏஓ அஜிதா பணி மாறுதல் பெற்று அங்கு பணிக்கு சேர்ந்து ஒரு வார காலம் ஆன நிலையில் கனிம வள கொள்ளை குறித்து உயர் அதிகாரிகளுக்கு பணிக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் மூன்று முறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியும் . கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோன்று அரசு அலுவலகங்களில் செயல்படும் உயர் அதிகாரிகள் தவறு செய்யும் பட்சத்தில் தண்டனை கடைநிலை ஊழியர்களுக்கு கிடைக்கிறது எனக் கூறியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விஏஓ அஜிதா மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்து கடந்த இரண்டு நாட்களாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள விஏஓக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் 36 கிராம நிர்வாக அலுவலர்களில் 35 பேர் அஜிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழக அரசு மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டமாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களின் திடீர் தொடர் போராட்டத்தினால் அரசு அலுவலகங்கள் முழுமையாக செயல்பட முடியாத நிலையில் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Next Story

