அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு*

அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு*
X
அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு*
தண்டியனேந்தல் பகுதியில் குண்டாறு அருகே கல்குவாரி அமைக்க அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அருப்புக்கோட்டை காரியாபட்டி திருச்சுழி நரிக்குடி பரளச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய விவசாயிகள் தண்டியனேந்தல் பகுதியில் குண்டாறு அருகே கல்குவாரி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கு கல்குவாரி அமைந்தால். நீர் வழித்தடம் அழிக்கப்படும். விவசாயம் பாதிக்கப்படும். கல்குவாரி அமைப்பதற்கு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படும் ஆனால் தற்போது நடத்தப்படும் கருத்துக்கேட்பு ‌ அனைத்தும் கண்துடைப்பாக உள்ளது என கூறினர். அதற்கு பதில் அளித்த கோட்டாட்சியர், கல்குவாரி நடத்த அனுமதிக்கப்படாது என கூறினார். அதேபோல காட்டு பன்றிகளை ஒழிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், வெள்ள நிவாரணம் விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியர் உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.‌
Next Story