தேனி அரசு கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம் - ஐந்து நாளாக நீடித்த போராட்டத்தில் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று உடற்கூறாய்வு முடிவு

உடற்கூறாய்வு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கல்லூரி விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பை படித்து வந் நிலையில் கடந்த 14 ஆம் தேதி கல்லூரியின் விடுதி கழிவறையில் மர்மமான முறையில் மாணவன் உயிரிழந்து கிடந்தார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது இந்நிலையில் மாணவன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உடற்குராய்வு செய்வதற்கு அனுமதி மறுத்து தொடர்ந்து 5வது நாளாக மாணவரின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் மாணவரின் உடலை உடற்கூராய்வு செய்வதற்கு சில கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர் இதனை அடுத்து அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு பெரியகுளம் கோட்டாட்சியர் ரஜத் பீடன் தலைமையில் உடற்குராய்வுக்கு முன்பு உடலில் உள்ள காயங்கள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டு பின்பு பிரேத உடற்கூறாய்வு செய்யப்பட்டது பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகு உடலை பெற்றுக்கொள்ள உள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்
Next Story