டேராடூன் ராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை 

டேராடூன் ராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை 
X
மாணவர்
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில்      ஜனவரி-2026-ஆம் பருவத்தில் மாணவர்கள் சேர்வதற்கான தேர்வு 01.06.2025-ல் நடைபெறவுள்ளது.  அதன் விபரங்கள் அடங்கிய முழு தொகுப்பு காலை www.rimc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை- 600 003 என்ற முகவரிக்கு 31.03.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும்.   01.01.2026 அன்று 11½ வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும் அதாவது 02.01.2013-க்கு முன்னதாகவும் 01.07.2014-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்வும் கிடையாது.  விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 01.01.2026-ல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில், ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர் சிறார்கள் இக்கல்லூரியில் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story