தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சி

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சி
X
கோரிக்கை
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் உணவக மேலாண்மை துறை சார்பாக, (சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் திறன் கவுன்சில்) மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் சான்றளித்த திறன் மேம்பாட்டு குறுகிய காலப் பயிற்சியின் ஒரு பகுதியாக,  பேக்கரி தொழில் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.  இவ்விழாவில், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்   மா.விஜயா, துணை முதல்வர் ரா.தங்கராஜ், கல்விசார் புலத்தலைவர் மது கிருத்திகா ஆகியோர் பேசினர். பயிற்சியாளர் எஸ்.கவிபிரியா இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.  முன்னதாக நுண்ணுயிரியல் துறை உதவிப்பேராசிரியர் அ.அனிதா ஞானக்குமாரி வரவேற்றார், நிறைவாக ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை துறைத்தலைவர் கே. ராஜபிரியா நன்றி கூறினார்.  விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா. கண்ணன் செய்திருந்தார். இந்த ஆறுமாத கால பயிற்சியின் மூலம் மாணவர்களின் திறன் மேம்படவும், தொழில் முனைவோராகவும், பேக்கரி துறையில் வேலை பெறுவதற்கும் பயன்படும்.  பயிற்சியில் பல்வேறு துறை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
Next Story