நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற கார் மீது பின்னால் வந்த கார் மோதியதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து! மூன்று பேர் படுகாயம்!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற கார் மீது பின்னால் வந்த கார் மோதியதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து! மூன்று பேர் படுகாயம்! ஓசூர் மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ் (60) அவருடைய மனைவி ஜெயலட்சுமி மற்றும் மகன் நானேஷ் ஆகியோர் தங்களது காரில் வேலூர் பகுதியில் உள்ள மகளை பார்க்க சென்றுள்ளனர் அப்போது அந்த கார் நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தது அப்போது திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (27) மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சிவா (29) ஆக இருவரும் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பெங்களூரில் உள்ள வேலையை முடித்துக் கொண்டு சென்னை நோக்கி நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்ற தங்கராஜன் காரின் மீது லேசாக உரசியதில் கட்டுபாட்டை இழந்த கார் மற்றொரு திசையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் விக்னேஷ் வந்த கார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உலோக தடுப்பானில் சிக்கி விபத்துக்குள்ளானது. மேலும் இரண்டு கார்களில் பயணித்த தங்கராஜ், ஜெயலட்சுமி, சிவா, ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி போலிசார் விபத்துக்குள்ளான கார்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் மேலும் மூவரையும் மீட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற கார் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளாகி மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story



