இளைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டால் வேலைவாய்பை எளிதில் பெறலாம் ஆட்சியர் பொ.ரத்தினசாமி

இளைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டால் வேலைவாய்பை எளிதில் பெறலாம் ஆட்சியர் பொ.ரத்தினசாமி
X
இளைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டால் வேலைவாய்பை எளிதில் பெறலாம் ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்தார்.
அரியலூர், பிப்.19- படிக்கும் போது, இளைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டால் எளிதில்  வேலைவாய்ப்பை  பெறலாம் எனறார் அரியலூர் ஆட்சியர் பொ.ரத்தினசாமி.அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை தொடக்கி வைத்தும், 106 பேருக்கு பணியமர்வு அழைப்பு கடிதங்களையும் வழங்கி அவர் மேலும் பேசியது: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசால் இத்தகைய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் இளைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறு மேம்படுத்திக் கொள்வதால் எளிதில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எனவே இது போன்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும் என்றார்.இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 96}க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும், 18 திறன் பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டனர். இம்முகாமுக்கு அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், திருச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் உதவி இயக்குநர் ரமேஷ்குமார், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மஞ்சுளா, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :
Next Story